பதறுகிறார் விஜய்
ஹெட்லைன்ஸ் டுடே பத்திரிகையின் கருத்துக்கணிப்பு திமுக கூட்டணியை தெம்பாக பேச வைத்திருக்கிறது. அதே நேரத்தில் அதிமுக கூட்டணி இது நிஜமாக இருக்குமோ என்று சின்ன ஜர்க்குடன் கவனிக்கிறதாம்.
ஆனால் இது பற்றி இரு தரப்புமே சிறிதளவு சந்தோஷம், சிறிதளவு துக்கத்தை வெளிப்படுத்தியதுடன் சரி. பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் நடிகர் விஜய் மட்டும் இப்படி ஒரு கருத்துக்கணிப்பு வந்தது
கோலிவுட் தேர்தல்கள்
தமிழக தேர்தல் இப்போதுதான் நடைபெற்று முடிந்திருக்கிறது. ஓட்டு எண்ணிக்கை வெளிவருவதற்கு முன்பாகவே கோடம்பாக்கம் இரண்டு கோஷ்டிகளாக பிரிந்து கிடக்கிறது. அதற்கு மேலும் தீ மூட்டுகிற மாதிரி இரண்டு சங்கங்களின் தேர்தலும் வரப் போகிறது. ஒன்று பெப்ஸி.
மற்றொன்று இயக்குனர்கள் சங்கம். இந்த முறை பெப்ஸி தலைவராக இருக்கும் வி.சி.குகநாதன் மீண்டும் போட்டியிடப் போகிறாராம். அவரை எதிர்த்து இதே சங்கத்தில் தற்போது செயலாளராக இருக்கும் சிவாவும் போட்டியிட போகிறாராம்.
இந்த போட்டியில் இன்னொருவரும் இருப்பார் என்று காதை கடிக்கிறார்கள் கோலிவுட்டில். அவர் தற்போது இயக்குனர்கள் சங்க செயலாளராக இருக்கும் ஆர்.கே.செல்வமணி. இப்போதே தங்களுக்கான ஆட்களை சேர்க்கும் வேலையில் இறங்கிவிட்டார்களாம் இவர்கள்.
இதனால் ஆங்காங்கே சலசலப்பு எழுந்த வண்ணம் இருக்கிறது. இயக்குனர் சங்க தேர்தலில் இந்த முறையும் பாரதிராஜாவே நிற்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார்களாம். அவர்தான் விலகி விலகிப் போகிறார் என்கிறார்கள்.
மற்றொன்று இயக்குனர்கள் சங்கம். இந்த முறை பெப்ஸி தலைவராக இருக்கும் வி.சி.குகநாதன் மீண்டும் போட்டியிடப் போகிறாராம். அவரை எதிர்த்து இதே சங்கத்தில் தற்போது செயலாளராக இருக்கும் சிவாவும் போட்டியிட போகிறாராம்.
இந்த போட்டியில் இன்னொருவரும் இருப்பார் என்று காதை கடிக்கிறார்கள் கோலிவுட்டில். அவர் தற்போது இயக்குனர்கள் சங்க செயலாளராக இருக்கும் ஆர்.கே.செல்வமணி. இப்போதே தங்களுக்கான ஆட்களை சேர்க்கும் வேலையில் இறங்கிவிட்டார்களாம் இவர்கள்.
இதனால் ஆங்காங்கே சலசலப்பு எழுந்த வண்ணம் இருக்கிறது. இயக்குனர் சங்க தேர்தலில் இந்த முறையும் பாரதிராஜாவே நிற்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார்களாம். அவர்தான் விலகி விலகிப் போகிறார் என்கிறார்கள்.
மணிரத்னம் முடிவு ஏன்?
பொன்னியின் செல்வன் படத்தை மிக ஆர்வமாக ஆரம்பித்தார் மணிரத்னம். ராஜஸ்தானில் ஆரம்பித்து, கன்னியாக்குமரி வரை அவர் தரை பயணமாகவே காரில் லொகேஷன் பார்த்துவிட்டு வந்ததெல்லாம் அவரது பேரார்வத்தின் காரணமாக நடந்தது.
அதுமட்டுமல்ல, தெலுங்கு தமிழ் முன்னணி ஹீரோயின் ஹீரோயின்களை இந்த படத்திற்குள் இழுத்து போட்டுவிட நினைத்த மணி, தனது அலுவலகத்திற்கு சம்பந்தப்பட்டவர்களை வரச்சொல்லி சம்பள பேச்சுவார்த்தை கூட நடத்தினார். ஆனால் அவரது கனவு புராஜக்ட் இப்போது கைவிடப் பட்டதாக வதந்திகள் உலவுகிறது.
விசாரித்தால் இந்த வதந்தி உண்மையாகும் வாய்ப்புதான் அதிகமாக இருக்கிறதாம். முதலில் தனது செலவில் படத்தை எடுத்து முடித்துவிட்டு, அதன்பின் வியாபாரம் செய்து கொள்ளலாம் என்று நினைத்தவருக்கு பெரிய இடத்து பிரஷர் வேறு மாதிரியாக வந்ததாம். இதனால்தான் அவர் இந்த பட திட்டத்தையே குப்பையில் போட்டார் என்றும் கிசுகிசுக்கிறார்கள். அவரே வாய் திறக்காத வரைக்கும் எதுவும் நிஜமில்லை.
சசி-சமுத்திரம் முட்டல்?
சசிகுமாரும் சமுத்திரக்கனியும் சேர்ந்து உருவாக்கும் போராளி படத்தின் படப்பிடிப்பு தேனி பகுதியில் நடந்து வருகிறது. கடந்த முறை சசிகுமாரின் தலையீட்டை அனுமதித்த சமுத்திரக்கனி இந்த முறை அதற்கு செவி சாய்க்காமல் முரண்டு பிடிக்கிறாராம்.
ஈசன் தோல்விக்கு பெரும் காரணம் சசிகுமார் என்பதுதான் சமுத்திரக்கனியின் வாதம். அதனால்தான் போராளி படத்தில் சசிகுமாரின் வார்த்தைகளுக்கு அவ்வளவாக மதிப்பு கொடுப்பதில்லையாம். ஈசன் படத்தில் ஆறு கோடியே முப்பது லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாம் சசிக்கு.
அந்த படத்தில் தாராளமாக செலவு செய்த இவர், இப்போது மினரல் வாட்டருக்கு கூட கணக்கு பார்க்கிறாராம். அக்கம் பக்கத்து கிராமங்களில் இருந்து நடிக்க வரும் ஊர் மக்களிடம், வந்து போகிற பஸ் செலவை கூட தர மாட்டேன்.
விருப்பம் இருந்தால் சொந்த செலவில் வந்து நடித்துவிட்டு போங்க என்கிறாராம். இப்படியா சிக்கனம் பார்ப்பது என்று கூடி கூடி பேசுகிறார்களாம் ஊர் மக்கள்.
அஜீத் என்ன செய்யப் போகிறார்?
அஜீத்தின் திடீர் முடிவால் ஆடிப் போயிருக்கிறார்கள் விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும். அவருக்கு இருக்கிற ஒரே சிறப்பே எப்பவும் மாறாத ரசிகர்கள்தான். எவ்வளவு பெரிய பிளாப் படத்தை கொடுத்தாலும், அப்படத்திற்கு பெரிய ஓப்பனிங் கொடுப்பதே இந்த ரசிகர்கள்தான்.
இவர்களை பகைத்துக் கொண்டாரே என்றுதான் அஜீத் மீது கவலைப்படுகிறார்கள் இவர்கள். அதுமட்டுமல்ல, அஜீத் படம் ரிலீஸ் ஆகும் போது முதல் நான்கு ஷோவையாவது முழு பணம் கட்டி ரிசர்வ் செய்துவிடுவார்களாம் ரசிகர்கள். அதற்கும் உத்தரவாதமில்லையே என்பதுதான் தியேட்டர்காரர்களின் கவலையாம்.
ஒரு நடிகர் சம்பளத்தை ஏற்றுவதே, தனக்கிருக்கிற ரசிகர் கூட்டத்தை காட்டிதான். இன்று பத்து கோடிக்கும் குறையாமல் சம்பளம் வாங்கும் அஜீத் இதை யோசிக்காமல் போனது மாபெரும் தவறு.
அந்த தவறை அவர் மங்காத்தா வெளிவரும் நேரத்தில் உணர்வார் என்று சாபம் கொடுக்காத குறையாக பேசுகிறார்களாம் தியேட்டர் அதிபர்கள். என்ன செய்யப் போகிறாரோ அஜீத்?
Post a Comment