அப்செட் ஏற்படுத்திய அமலா
வீரசேகரன் படத்தில்தான் அமலா பால் முதன் முதலில் அறிமுகமானார் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள் அப்பட நிறுவனத்தினர். இல்லையில்லை. அவர் அறிமுகமான படம் விகடகவிதான் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள் அப்படத்தில் உழைத்தவர்கள்.
ஆனால் இவர்கள் இருவரையும் ஒரே தட்டில் வைத்துதான் எடை போட்டுக் கொண்டிருக்கிறார் அமலா. சமீபத்தில் விகடகவி படம் ரிலீஸ் ஆனது. அதன் டி.வி பிரமோஷன்களுக்கு அழைத்தார்கள். ஆனால் நான் வரமாட்டேன் என்று உறுதியாக கூறிவிட்டார் அவர்.
சாபம் விடாத குறையாக அமலாவை திட்டி தீர்த்தார் அப்பட இயக்குனர். அதே நிலைமைதான் இப்போது வீரசேகரன் குழுவுக்கும். இவர்களது அடுத்த தயாரிப்பு கொஞ்சம் வெயில், கொஞ்சம் மழை. பிரபல பாடலாசிரியர் ஏகாதசிதான் இப்படத்தின் இயக்குனர்.
வீரசேகரன் படத்தில் உதவி இயக்குனராகவும் இருந்தாராம். அந்த நட்பின் தொடர்ச்சியாகவும், அறிமுகப்படுத்திய கம்பெனி எடுக்கிற படம் என்பதாலும் இந்த வாரம் நடைபெற இருக்கும் பாடல் வெளியீட்டு விழாவுக்கு அழைத்தார் அமலாவை. விகடகவி டீமுக்காவது பதில் சொன்னார் அமலா. இவர்கள் அடித்த போனை கூட எடுக்கவில்லையாம் அவர். நல்லாயிருக்கு நாகரீகம்.
சாமிக்கு வந்த சிக்கல
டைரக்டர் சாமி சிந்து சமவெளி படத்தை அடுத்து ஒரு புதிய படத்தை இயக்குவதற்குள் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறார். இவருக்கு எந்த ஹீரோவும் கால்ஷீட் தர முடியாது என்று அஞ்சி ஓடுகிறார்கள்.
ஹீரோக்கள்தான் இப்படி என்றால் ஹீரோயின்களை பற்றி கேட்கவே வேண்டாம். இவர் பக்கமே தலை வைத்து படுக்க அஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். எப்படியோ காஸ்ட்யூமர் சாய் என்பவரை தயாரிப்பாளராக்கி ஒரு புதிய படத்தை எடுக்க முனைந்தார் அவர்.
வெளுத்துக்கட்டு படத்தின் ஹீரோவான கதிரை நடிக்க வைத்து இரண்டு நாட்கள் படப்பிடிப்பும் முடித்துவிட்டார். இந்த நேரத்தில்தான் யாரோ, தயாரிப்பாளரின் மனசை கலைத்துவிட்டார்களாம். இரண்டு நாட்கள் செலவோடு போகட்டும். படத்தை நிறுத்திடுங்க என்று கூறிவிட்டாராம் அவர். செய்வதறியாமல் திகைத்து நிற்கிறார் சாமி.
கருப்பு வயிற்றில் கடமுடா
கஞ்சா கருப்பு வயிற்றில் திடீரென்று பீதியை கிளப்பிவிட்டிருக்கிறார் கே.எஸ்.ரவிகுமார். ராணா படத்திலிருந்து வடிவேலுவை நீக்கிவிட்டார்கள். இதையடுத்து இந்த படத்தை பற்றி விமர்சித்த வடிவேலு ராணாவாவது, காணாவாவது என்று ஏடா கூடமாக கமென்ட்டும் அடித்துவிட்டார்.
இனிமேல் நினைத்தால் கூட இந்த படத்தில் வடிவேலு இருக்கப் போவதில்லை. இந்த நிலையிலாவது ஆமாம். இந்த படத்தில் கஞ்சா கருப்பு நடிக்கிறார் என்று அழுத்தம் திருத்தமாக சொல்ல வேண்டியதுதானே? நேற்று நடந்த ராணா பிரஸ்மீட்டில் இது குறித்து ரவிக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த படத்தில் கஞ்சா கருப்பு நடிக்கிறாரா? அதற்கு ரவிகுமார் சொன்ன பதில்தான் கருப்புவை கதிகலங்க அடித்திருக்கும். இப்படிதாங்க இந்த படத்தில் அவர் நடிக்கிறார் இவர் நடிக்கிறார்னு நிறைய நியூஸ் வருது.
ஆனால் நாங்க எதையும் இன்னும் முடிவு பண்ணல என்றார். அப்ப கருப்பு இந்த படத்தில் இருக்காரா? இல்லையா? என்ற பட்டிமன்றத்தை இன்னும் கொஞ்ச நாள் ஓட்டினதான் ஆகணும் போலிருக்கு.
தெய்வ திருமகன்- ஒரு ஜாதிமோதல்?
போகிற போக்கை பார்த்தால் தெய்வ திருமகன் டைட்டில் விஷயம் ஜாதி பிரச்சனையை து£ண்டி விடும் போலிருக்கிறது. இன்று அப்படத்தின் ஹீரோ விக்ரம் வீட்டை 100 க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகையிட முயன்றபோது கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இதற்கிடையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் மோகன் நடராஜன் நாடார் இனத்தை சேர்ந்தவராம். முதலில் டைட்டில் பிரச்சனையில் கொஞ்சம் அனுசரிச்சு போங்க என்று தேவர் இன தலைவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய இவர், அது நடக்காமல் போனதால் தனது ஜாதி தலைவர்களை சந்தித்து முறையிட ஆரம்பித்திருக்கிறாராம்.
இதையடுத்து ஏற்பட்ட திருப்பம்தான் திகிலை வரவழைக்கிறது. நாடார் அமைப்பை சேர்ந்த தலைவர்கள், தெய்வ திருமகன் படத்தை அப்படியே வெளியிடுவோம். யாராவது தியேட்டருக்கு வந்து பிரச்சனை செய்தால், நாங்கள் பாதுகாப்புக்கு நிற்போம் என்று கூறியிருக்கிறார்கள். பிரச்சனை வருவதற்கு முன்பே அதிகாரிகள் கண் விழித்தால் நல்லது.
சிக்கலில் மாட்டிய சிம்பு
வானம் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு கடைசி நேரத்தில் கோடிக்கணக்கில் டெபிசிட். இதனால் படம் வெளிவருவதே இழுபறியாக இருக்கிறது. இந்த நேரத்தில் சிம்புவுக்கு தர வேண்டிய சம்பளத்திற்கு பதிலாக இரண்டு ஏரியாக்களை கொடுத்துவிட்டார்களாம்.
அதுமட்டுமல்ல, இன்னும் கொஞ்சம் பணம் கொடுத்து உதவுங்கள் என்றும் கேட்டார்களாம். அதற்கு காரணமும் இருக்கிறது. சிம்புவுக்கு பேசிய சம்பளம் போக, அவர் இழுத்துவிட்ட செலவே கிட்டதட்ட ஒரு கோடியை தாண்டுமாம். எந்த நாட்டிற்கு போனாலும் சிம்பு செய்யும் வெட்டி செலவை தயாரிப்பாளரே செலுத்தினாராம்.
சாம்பிளுக்கு ஒன்று. லண்டன் போயிருந்த போது மசாஜ் பண்ணிக்கணும் என்றாராம். சரி போயிட்டு வாங்க என்று அனுப்பினாராம் தயாரிப்பாளர். திரும்பி வந்து சிம்பு கொடுத்த பில் 6000 பவுண்ட்ஸ். இப்படி அவர் தொட்டதெல்லாம் பெரும் செலவு.
இதையும் கணக்கில் சேர்த்துதான் பணம் கேட்டார்களாம். அடுத்த படத்திற்கு இவர்களுக்கே கால்ஷீட் தருவதாக இருந்த சிம்பு இப்போது அதிர்ந்து போய் தன் எண்ணத்தையே மாற்றிக் கொண்டதாக கேள்வி.
Post a Comment